டெசர்ட் டிலைட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பேரீட்சை பழம் - கால் கிலோ

பால் - ஒரு டம்ளர்

பட்டர் - இரண்டு மேசைக்கரண்டி

நெய் - இரண்டு தேக்கரண்டி

முந்திரி - ஐம்பது கிராம்

பாதம், பிஸ்தா, முந்திரி, அக்ரூட் - எல்லாம் சேர்த்து ஐம்பது கிராம்

செய்முறை:

பேரீட்சையை கொட்டையை நீக்கி விட்டு பொடியாக அரிந்து பட்டரில் வதக்கி பாலில் வேக விடவும்.

முந்திரியை ஊற வைத்து அரைத்து சேர்த்து கிளறவும். பேரீட்சை வெந்ததும் சர்க்கரை சேர்த்து மீண்டும் கிளறவும்.

நல்ல கிளறி கெட்டியானதும் இறக்கி பாதாம், பிஸ்தா, முந்திரி, அக்ரூட் ஆகியவற்றை ஊற வைத்து கட் பண்ணி நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

சுவையான டெசர்ட் டிலைட் ரெடி.

குறிப்புகள்: