ஜீரா சிக்கன் கிரேவி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 600 கிராம்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

கரம் மசாலா - அரை ஸ்பூன்

எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

சில்லி பவுடர் - 2 டீஸ்பூன்

சீரகப்பவுடர் - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 2

தக்காளி -2

மிளகாய் - 4

தயிர் - 1 டேபிள் ஸ்பூன்

தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

முந்திரிப்பருப்பு - 6

மல்லி, புதினா - கொஞ்சம்.

உப்பு - தேவைக்கு

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து கழுவி நீர் வடிகட்டிக்கொள்ளவும். சிக்கனில் தயிர், 1 டீஸ்பூன் சில்லி பவுடர், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து அரை மணி நேரம் வைக்கவும்.

வெங்காயம், தக்காளி, மல்லி, புதினா கட் செய்து வைக்கவும். தேங்காய், முந்திரிப்பருப்பு சேர்த்து அரைத்து வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம் வதக்கி இஞ்சிபூண்டு சேர்த்து, கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் சிம்மில் வைத்து, மல்லி, புதினா, மிளகாய், தக்காளி, உப்பு, சில்லிபவுடர், சீரகப்பவுடர் சேர்த்து வதங்கியதும் சிக்கனை சேர்த்து 1 விசில் வைத்து திறக்கவும்.

பின்பு குக்கரில் உள்ள சிக்கனில் அரைத்த தேங்காய் முந்திரி சேர்த்து கொதிக்கவைத்து சிம்மில் மூடி 10 நிமிடம் வைத்து இறக்கவும்.

சுவையான ஜீரா சிக்கன் கிரேவி ரெடி.

குறிப்புகள்: