ஜிஞ்ஜர் சிக்கன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - அரை கிலோ

வெங்காயம் - ஒன்று

சிக்கன் ஸ்டாக் - கால் லிட்டர்

சோயாசாஸ் - முக்கால் கப்

இஞ்சி - ஒரு மேசைக்கரண்டி

பூண்டு - மூன்று பல்

வினிகர் - நான்கு மேசைக்கரண்டி

சர்க்கரை - ஒரு தேக்கரண்டி

சோளமாவு - ஒரு மேசைக்கரண்டி

தக்காளி பேஸ்ட் - ஒரு மேசைகரண்டி

காய்ந்த மிளகாய் - நான்கு

செய்முறை:

சிக்கனை கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி வேகவைத்து அந்த தண்ணீரை தனியாக எடுத்து அதில் காய்ந்த மிளகாயை திரித்து போட்டு அத்துடன் சோயாசாஸ், சர்க்கரை, வினிகர், தக்காளி பேஸ்ட், உப்பு, பொடியாக இஞ்சி, பூண்டு அரிந்து போட்டு கலக்கி ஐந்து நிமிடம் வைக்கவும்.

பானில் எண்ணெய், பட்டர் கலந்து வெங்காயத்தை போட்டு வதக்கி கலந்து வைத்த மசாலாவை போடவும்.

மூன்று நிமிடம் மசாலா வெந்ததும், வேகவைத்த சிக்கனை போட்டு சோளமாவு கரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்புகள்: