ஜிஞ்சர் மிண்ட் ப்ளாக் டீ
0
தேவையான பொருட்கள்:
டீத்தூள் - 1 டீஸ்பூன் அல்லது 2 டீ பேக்
இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன் (தட்டிக்கொள்ளவும்)
புதினா இலை - 15 இலை
சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 லிட்டர்.
செய்முறை:
டீ பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
தட்டிய இஞ்சி, புதினா, சர்க்கரை போடவும்.
டீத்தூள் அல்லது டீ பேக் போடவும்.
தேன் கலர் வந்தவுடன் வடிகட்டி ஃப்ளாஸ்கில் ஊற்றி வைக்கவும்.
சூடான சுவையான ஜிஞ்ஜர் மிண்ட் ப்ளாக் டீ ரெடி.