ஜவ்வரிசி பாயசம் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - 1/2 கப்

பால் - 2 கப்

சர்க்கரை - 1 கப்

தேங்காய் பால் - 1/2 கப்

முந்திரிப்பருப்பு - 10

கிஸ்மிஸ் - 10

நெய் - 3 டேபிள் ஸ்பூன்

தண்ணீர்- 1 கப்

முட்டை - 1

ஏலக்காய் - 2

செய்முறை:

ஜவ்வரிசியை தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

கனமான பாத்திரத்தில் பாலை நன்கு கெட்டியாகும் வரை காய்ச்சவும்.

அதை ஜவ்வரிசி கலவையில் ஊற்றி கொதிக்கவிடவும்

பின் தேங்காய் பால், சர்க்கரை, முட்டை விட்டு கிளறி நன்கு கொதிக்க விடவும்

வாணலியில் நெய் விட்டு முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், ஏலக்காய் போட்டு பொரிந்தவுடன் அதை ஜவ்வரிசியில் கொட்டி இறக்கவும். சுவையான ஜவ்வரிசி பாயசம் தயார்.

குறிப்புகள்: