ஜவ்வரிசி ஃபிர்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - 50 கிராம்

ரவை - 50 கிராம்

சீனி - 150 கிராம்

ஏலக்காய் - 4

பாக்கெட் பால் - அரை லிட்டர்

முந்திரி,கிஸ்மிஸ்- தலா 10

நெய் - 4 டீஸ்பூன்

செய்முறை:

ஜவ்வரிசியை ஊறவைத்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.ரவையை லேசாக வறுத்து எடுக்கவும்.

பாலை ஏலக்காய் தட்டி போட்டு காய்ச்சவும்.

காய்ச்சிய பாலில் வேக வைத்த ஜவ்வரிசி,வறுத்த ரவை சேர்க்கவும்.சேர்ந்து கொதி வரவும் சர்க்கரை சேர்க்கவும்.கெட்டியாக இருந்தால் விருப்பத்திற்கு காய்ச்சிய பாலோ அல்லது கொதி நீரோ சேர்த்து கொள்ளலாம்.

நெய்யில் முந்திரி பருப்பு,கிஸ்மிஸ் இளஞ்சிவப்பாக வறுத்து ஃபிர்னியில் போடவும்.

சுவையான ஜவ்வரிசி ஃபிர்னி ரெடி.

குறிப்புகள்: