சோறு வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சோறு - 1/2 கப்

ரவை - 1/2 கப்

அரிசி மாவு - 1 1/2 கப்

சோடா உப்பு - சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - தேவையான அளவு

தேங்காய்ப்பூ - 4 மேசைக்கரண்டி

பெரிய வெங்காயம் - 3

இறால் - 15

மசாலாத் தூள் - 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

கருவேப்பிலை - சிறிது

மாசித்தூள் - 2 மேசைக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

முதலில் இறாலை கழுவி சிறிது மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மசாலாத் தூள், உப்பு சேர்த்து பிரட்டி எடுத்து தனியாக வைக்கவும்.

வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

பின் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு, கருவேப்பிலை, மசாலாத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி பிரட்டிய இறாலை சேர்த்து வதக்கவும்.தீயை மிதமானதாக வைக்கவும்.

நன்கு வெங்காயம் வதங்கி வெந்ததும் மாசித்தூளை சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் அடுப்பில் வைத்து இருந்து இறக்கி தனியாக வைக்கவும்.

பின் ஒரு பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் தூள், தேங்காய்ப்பூ ,சோடா உப்பு, சோறு சேர்த்து பின் ரவை அரிசிமாவை போட்டு நன்கு கைகளால் பிசைந்துக்கொள்ளவும்.

6 மணிநேரம் ஊறவிடவும். பின் ஒரு வெள்ளை துணியை தண்ணீரில் நனைத்து அதை நன்கு பிழிந்துக்கொள்ளவும்.

பின் அதன் மேல் ஒரு சிறு உருண்டை அளவு மாவை அடுத்து நன்கு வட்டமாக தட்ட வேண்டும். வேண்டும் என்றால் கையில் சிறிது தண்ணீரை தொட்டுக் கொண்டு தட்டவும்.

பின் அதன் மேல் செய்து வைத்த வெங்காய கலவையை சிறிது வைத்து அந்த துணியிலேயே சிறிது இடை வெளி விட்டு இன்னொறு சிறு உருண்டை அளவு மாவை வைத்து முதலில் தட்டின மாதிரியே இந்த அளவு மாவையும் தட்டி முதலில் தட்டி வைத்ததின் மேலே வைத்து சிறிது தண்ணீர் தொட்டு நன்கு மூடிவிடவும்.

வாடா வெடித்து இருக்காமல் ஒட்டி மூட வேண்டும். அப்பொழுதுதான் பொரிக்கும் போது உள்ளே வைத்த வெங்காய கலவை வெளியில் வராது.

இதே போல் எல்லாமாவையும் செய்து எண்ணெய் சூடாக்கி மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.

சுவையான சோறு வடை தயார்

குறிப்புகள்: