சுறா மீன் புட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுறா மீன் - கால் கிலோ எலும்பில்லாதது

வெங்காயம் - ஐந்து பெரியது

தக்காளி - ஒன்று

இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி

தேங்காய் - கால் மூடி (துருவியது)

எண்ணெய் - மூன்று மேசைக்கரண்டி

பட்டை - ஒன்று

மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி

பச்சை மிளகய் - நான்கு

கொத்தமல்லி - கொஞ்சம்

செய்முறை:

சுறா மீன் சால்னா செய்யும் போதே அதில் புட்டுக்கு தேவையான மீனை சேர்த்து வேகவைத்து தனியாக எடுத்து வைக்கவேண்டும்.

இப்போது எலும்பில்லாத வெந்த மீன் கால் கிலோவை உதிர்த்து வைக்கவும்.

முதலில் எண்ணெயை காய வைத்து ஒரு சிறிய பட்டையை போட்டு கொஞ்சமாக வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு தாளித்து மொத்த வெங்காயத்தையும் போட்டு நல்ல வதக்கவும்.

வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் பொடியாக அரிந்து சேர்த்து மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நல்ல வதக்கி தேங்காயையும் சேர்த்து வதக்கி கடைசியில் உதிர்த்து வைத்துள்ள மீனையும் சேர்த்து வதக்கி கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

சுவையான சுறாமீன் புட்டு ரெடி.

குறிப்புகள்: