சுறா மீன் சால்னா
தேவையான பொருட்கள்:
சுறா மீன் - அரை கிலோ + கால் கிலோ
மீனில் போட்டு கொதிக்கவைக்க:
வெங்காயம் - மூன்று
தக்காளி - மூன்று
பச்சை மிளகாய் - இரண்டு
மிளகு தூள் - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - இரண்டு தேக்கரண்டி (வறுத்து பொடித்தது)
தனியாதூள் - இரண்டு மேசைக்கரன்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
பூண்டு - ஐந்து பெரிய பல்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
வெந்தயம் - கால் தேக்கரண்டி
கடைசியில் அரைத்து ஊற்ற:
தேங்காய் - அரை மூடி
கொத்தமல்லி தழை - சிறிது மேலே தூவ
செய்முறை:
மீனை நல்ல சுத்தம் செய்து முக்கால் கிலோவும் (கால் கிலோ புட்டு செய்ய) அதில் மேலே சொன்ன கொதிக்க வைக்க வேண்டிய பொருட்களை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கொதிக்கும் போது தீயை கொஞ்சம் குறைத்து வைத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் கொதிக்கும் போது பொங்கும்.
மீன் நல்ல வேக வேண்டும்.
வெந்ததும் மூன்றில் ஒரு பாகத்தை முள் இல்லாமல் எடுத்து வைக்கவும். அது சுறா புட்டு செய்ய.
தேங்காயை அரைத்து ஊற்றவும்.
தேங்காயை அரைத்து ஊற்றி கொதிக்க விடவும். தேங்காய் வாசனை அடங்கியதும் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்டி கொத்தமல்லி தழை தூவவும்.