சுறா மீன் குழம்பு 2
தேவையான பொருட்கள்:
தோல் எடுத்த சுறா மீன் - அரைக்கிலோ
வெங்காயம் - ஒன்று
தேங்காய்ப்பால் - ஒரு கோப்பை
புளி - ஒரு எலுமிச்சைப்பழ அளவு
பச்சைமிளகாய் - இரண்டு
மிளகாய்தூள் - ஒரு கரண்டி
தனியாத்தூள் - இரண்டு கரண்டி
கரம் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - ஒருகரண்டி
மல்லிக்கீரை - சிறிது
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
எண்ணெய் - நான்கு கரண்டி
தயிர் - இரண்டு கரண்டி
உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
மீனை சுத்தம் செய்து துண்டுகள் போட்டுக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்
புளியை இருமுறை கரைத்து அதனுடன் மல்லித்தூள், மசாலாத்தூள், உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
ஒரு சட்டியை அடுப்பில் வைத்து வெங்காயத்துடன் மிளகாய்தூளை போட்டு பொரிக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது போட்டு கிளறி புளியை ஊற்றவும்.
உடனே தேங்காய்ப்பால், தயிர், பச்சைமிளகாய், மல்லிதழை போட்டு மீன் துண்டுகளைப் போட்டு வேகவிடவும்.