சுறா மீன் கட்லெட்
0
தேவையான பொருட்கள்:
சுறா மீன் - அரை கிலோ
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - மூன்று
கரம் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு கரண்டி
முட்டை - இரண்டு
உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
சுறாமீனை துண்டுகள் போட்டு சிறிது உப்பு, மஞ்சள் சேர்த்து வேகவைத்து தோல் முள் எடுத்து விட்டு உதிர்த்துக் கொள்ளவும்.
வெங்காயம், மிளகாயை பொடியாக நறுக்கவும்.
மீனுடன் எண்ணெய் தவிர அனைத்தையும் சேர்த்து பிரட்டி தேவையான வடிவத்தில் செய்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.