சுறா புட்டு
தேவையான பொருட்கள்:
சுறாமீன் - 1/4 கிலோ
தக்காளி - 4 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - பாதி
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிப்புக்கு
மசாலா தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
பச்சை மிளகாய் - 1
செய்முறை:
சுறாமீனை கழுவி மஞ்சள் தூள் போட்டு தண்ணீரில் வேகவிடவும்.
வெந்ததும் உதிர்த்துக் கொள்ளவும்
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் சீரகம் போடவும். பின் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு தாளித்து வெங்காயம் நன்கு வதங்கியதும்,
தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.
பின் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, கீறிய பச்சைமிளகாயை போட்டு நன்கு வதக்கவும்.
பின் மீனை போட்டு நன்கு வதக்கி குறைந்த தீயில் வைத்து வேகவிடவும். தண்ணீர் சிறிது கூட சேர்க்கக்கூடாது. இடையில் கிளறிவிடவும். நன்கு வதங்கியதும் இறக்கவும்.