சுரைக்காய் இறால் கூட்டு (1)
0
தேவையான பொருட்கள்:
சுரைக்காய் - 500 கிராம்
இறால் - 10
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
பெருஞ்சீரகத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்கய்ப்பால் - 1 கோப்பை
எண்ணெய் - தாளிக்க
உப்பு - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
சுரைக்காய் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இறாலை சுத்தம் செய்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கி இறால், பெருஞ்சீரகத்தூள், பச்சைமிளகாய் போட்டு கிளறி அதில் சுரைக்காயை போட்டு வேகவிடவும்.
பாதி வெந்ததும் தேங்காய்ப்பாலை ஊற்றவும். காய் வெந்து சேர்ந்தால் போல் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.