சுருட்டு ஈரல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டு ஈரல் - அரைகிலோ

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்

மல்லித்தூள்- 1 டீஸ்பூன்

சீரகத்தூள் - 1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரைஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

வெங்காயம் - மீடியம் சைஸ் 1

தக்காளி - சிறியது 1

உப்பு - தேவைக்கு

தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)

மல்லி இலை - கொஞ்சம்.

செய்முறை:

ஈரலை சிறிய துண்டுகளாக்கி ஐந்து தண்ணீர் அலசி வடிகட்டி வைக்கவும்.

மிக்ஸியில் மேலே குறிப்பிட்ட தூள் வகைகள், தேங்காய் துருவல், வெங்காயம், தக்காளி, மல்லி இலை சேர்த்து கெட்டியாகக் அரைத்து கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு, அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு, பின்பு அரைத்த மசாலா போட்டு,ஈரல் சேர்த்து பிரட்டி, உப்பு அளவாய் போட்டு மூடி விடவும். உப்பு சிறிது கூடினால் கூட கடுத்து விடும்.

குக்கரை இரண்டு விசில் வைத்து இறக்கி விடவும். வெந்த ஈரலில் உள்ள தண்ணீரை வத்த விட்டு எண்ணெய் தெளிந்து பரிமாறவும்.

சுவையான சுருட்டு ஈரல் ரெடி.

குறிப்புகள்: