சீர் குருமா (பாயசம்)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பால் – 6 கப்

சேமியா – 1 கப்

சக்கரை – 3/4 கப்

பாதாம் பருப்பு,முந்திரி, பிஸ்தா பருப்பு – ¼ கப்

நெய் – 2 மேஜை கரண்டி

ஏலக்காய் - 3

குங்குமபூ – 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் பாதாம் பருப்பு, முந்திரி மற்றும் பிஸ்தா பருப்பினை சிறிது நேரம் ஊறவைத்து பின் மெல்லியதாக நீட்டாக வெட்டி கொள்ளவும்.

6 கப் பாலினை 4 கப் பாலகா மாறும் வரை மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

2 தே.கரண்டி நெய்யில் சேமியாவை போட்டி பொன் நிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.

அதன்பின் பாதம் பருப்பு, பிஸ்தா பருப்பு மற்றும் முந்திரி சேர்த்து வறுத்து கொள்ளவும்.

பின்பு பாலில் சேமியா சேர்த்து வேகவிடவும்.

சேமியா பாதி வெந்த்தும் சக்கரை மற்றும் நெய் சேர்க்கவும்.

கடைசியில் வறுத்து வைத்துள்ள பருப்புடன், குங்குமபூ சேர்க்கவும். ஏலக்காயினை தட்டி போடவும்.

இப்பொழுது சுவையான சீர் குருமா ரெடி.

குறிப்புகள்: