சீரக வெண்டைக்காய்
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பிஞ்சு வெண்டைக்காய் - 250 கிராம்
மிளகாய்வற்றல் - 4
சீரகம் - முக்கால் ஸ்பூன்
தேங்காய்துருவல் - 1 கப்
கடுகு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1 கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - ஒரு கப்
செய்முறை:
வெண்டைக்காயை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய வெண்டைக்காயை சிறிது வேகவிட்டு தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.
தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், சீரகம், உப்பு சேர்த்து நைசாக அரைத்து வெந்த வெண்டைகாயில் போட்டு கிளறி விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெண்டைக்காய் கலவையை அதில் போட்டு நன்கு சுருளும் வரை வதக்கி இறக்கவும்.