சீனி வாடா
0
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - ஒரு படி
மைதா - 6 கப்
முட்டை - 6
தேங்காய் - 1
சீனி - 2 கப்
நெய் - 200 கிராம்
ஏலக்காய் - 2
செய்முறை:
தேங்காயைத் துருவி கெட்டியாக பால் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசிமாவினைப் போட்டு, அதில் மைதாவை சலித்து சேர்த்துக் கொள்ளவும்.
நெய்யை உருக்கி ஊற்றிக் கொள்ளவும். முட்டையையும் உடைத்து நன்கு அடித்து மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
சீனி, பொடித்த ஏலக்காய் மற்றும் தேங்காய் பால் ஆகியவற்றை மாவுடன் சேர்த்து தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவினை ஒரு துணியில் நமக்கு தேவையான அளவு வாடாவாகத் தட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிதமான தீயில் தட்டி வைத்துள்ள வாடாவை எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.