சீனி சோறு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 5 குவளை

சீனி - 5 குவளை

தண்ணீர் - 7. 1/2 குவளை

பட்டை - ஒரு துண்டு

கிராம்பு - 3

ஏலக்காய் - 3

குங்குமப்பூ - 1/2 டேபிள்ஸ்பூன்

பன்னீர் - ஒரு கரண்டி

நெய் - 200 கிராம்

முந்திரி - 15

கிஸ்மிஸ் - ஒரு கைப்பிடி

கேசரிகலர் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி, கிஸ்மிஸ் போட்டு தாளித்து அரைகப் தண்ணீர் எடுத்து வைத்துக்கொண்டு மீதி தண்ணீரை ஊற்றி கொதித்ததும் அரிசியை போட்டு சோற்றை விரையாக ஆக்கவும்.

இடையில் எடுத்து வைத்து இருக்கும் அரைகப் தண்ணீரை சீனியில் ஊற்றி பாகு காய்ச்சவும் (சீனி கரைந்தால் போதும்). அதில் கலர் பவுடர் போட்டு காய்ச்சவும்.

சோறு புழுங்கியவுடன் (அரிசி இருக்கக்கூடாது) அதில் பாகை ஊற்றி எல்லா பக்கமும் நன்கு கிளறி தம்மில் போடவும்.

கடைசியில் பன்னீரில் குங்குமப்பூவை போட்டு கரைத்து சோற்றில் உற்றி கிளறி இறக்கவும்.

குறிப்புகள்: