சில்லி பீஃப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பீஃப் கறி - 500 கிலோ

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 4

இஞ்சி பூண்டு விழுது - 2 கரண்டி

மிளகாய்தூள் - 1 கரண்டி

சோயாசாஸ் - 2 கரண்டி

மல்லிக்கீரை - 1 கொத்து

எண்ணெய் - 4 கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கறியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக போட்டுக் கொள்ளவும்.

வெங்காயத்தை நீளமாக நறுக்காமல் கொஞ்சம் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை விதையை நீக்கி இரண்டாக கீறி வைக்கவும்

கறி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்தூள், உப்பு போட்டு தண்ணீர் வற்றும் வரை நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கி வேக வைத்த கறியை கொட்டி நன்கு கிளறி சோயாசாஸ் ஊற்றி கிளறிவிட்டு மல்லிக்கீரை தூவி சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: