சில்லி சிக்கன் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - 500 கிராம்

வெங்காயம் - ஒன்று

குடைமிளகாய் - ஒன்று

பச்சைமிளகாய் - மூன்று

மிளகாய்தூள் - 1 கரண்டி

மிளகுத்தூள் - 1 கரண்டி

சில்லிசாஸ் - 1 கரண்டி

சிகப்புகலர் - 1 சிட்டிகை

அஜினமோட்டோ - 1 சிட்டிகை

சோளமாவு - 3 கரண்டி

எண்ணெய் - ஒரு கோப்பை

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோழியை சுத்தம் செய்து துண்டுகள் போட்டுக் கொள்ளவும்.

வெங்காயம், குடைமிளகாயை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்

கோழியை இரண்டு கோப்பை தண்ணீர் ஊற்றி உப்பு போடாமல் ஐந்து நிமிடம் லேசாக வேகவிடவும். வெந்தவுடன் கோழியையும் தண்ணீரையும் தனியாக எடுத்து வைக்கவும்

ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், குடைமிளகாய், பச்சைமிளகாயை போட்டு மூன்று நிமிடம் வதக்கவும்.

பின் அதில் மிளகாய்தூள், மிளகுத்தூள், அஜினமோட்டோ, சில்லிசாஸ், கலர் எல்லாம் போட்டு கிளறி வேக வைத்த கோழியையும் போட்டு மூன்று நிமிடம் வதக்கி கோழி வேகவைத்த தண்ணீரில் கோப்பை தண்ணீரை அதில் ஊற்றி நன்கு வேகவிடவும். தேவையென்றால் இன்னும் சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிட்டு அதில் சோளமாவை கட்டியில்லாமல் கிளறி கிரேவி போல் வந்ததும் சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: