சில்லி சிக்கன் (1)

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சிறு துண்டுகளாக நறுக்கிய சிக்கன் - 1/4கிலோ

முட்டை- 1

கான்பளவர்- 1/4கப்

இஞ்சிபூண்டுவிழுது- 1ஸ்பூன்

நீட்டமாக நறுக்கிய வெங்காயம்- 2

இரண்டாக நறுக்கிய ப.மிளகாய்- 6

சோயாசாஸ்- 1ஸ்பூன்

வினிகர்- 1ஸ்பூன்

உப்பு- தேவைக்கு

செய்முறை:

சிக்கனுடன் முட்டை, கான்பளவர்,இஞ்சிபூண்டு விழுது உப்பு போட்டு 1/2மணி நேரம் ஊறவைத்து காய்ந்த எண்ணெயில் பொறித்து

எடுக்கவும்.

வாணலியில் 3ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும் ப.மிளகாய் பொறித்த சிக்கன் போட்டு பிரட்டவும் பிறகு வினிகர், சோயாசாஸ், கொஞ்சம் உப்பு போட்டு கலந்து இறக்கவும்.

மேலே கொ.மல்லி தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: