சில்லி சிக்கன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ

டொமேட்டோ கெட்சப் - மூன்று மேசைக்கரண்டி

சோயா சாஸ் - மூன்று மேசைக்கரண்டி

டொமேட்டோ பேஸ்ட் - நான்கு மேசைக்கரண்டி

சில்லி சாஸ் - ஒரு மேசைக்கரண்டி

மேகி க்யூப் - அரை க்யூப்

மிளகாய் தூள் - அரைத்தேக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி

தாளிக்க:

பட்டர் - மூன்று மேசைக்கரண்டி

வெங்காயத் தாள் - ஒரு தழை

கேப்ஸிகம் - ஒரு துண்டு

கொத்தமல்லித் தழை - மூன்று மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - இரண்டு மேசைக்கரண்டி

செய்முறை:

சிக்கனை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தாள், கேப்ஸிகம், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை போட்டு அதனுடன் சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகாய் தூள், டொமேட்டோ பேஸ்ட், டொமேட்டோ கெட்சப், மேகி க்யூப், இஞ்சி பூண்டு பேஸ்ட் அனைத்தையும் போட்டு நன்கு பிரட்டி வைக்கவும்.

பிரட்டி வைத்திருக்கும் சிக்கனுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

வாணலியில் பட்டரை போட்டு உருகியதும் நறுக்கின வெங்காயத் தாள் சேர்த்து வதக்கவும்.

அதன் பின்னர் நறுக்கி வைத்திருக்கும் கேப்ஸிகம், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கவும்.

வதக்கியவற்றை வேக வைத்துள்ள சிக்கனில் போட்டு ஒன்றாக கிளறி இறக்கி விடவும்.

சுவையான சில்லி சிக்கன் தயார்.

குறிப்புகள்: