சிம்ப்பிள் பிரியாணி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிரியாணி அரிசி - 1 கிலோ

கோழி - 1 கிலோ 10 துண்டுகளாக்கவும

இஞ்சி & பூண்டு விழுது – 5 மேசை கரண்டி

வெங்காயம் - 2 பெரியது

பச்சை மிளகாய் – 10

தக்காளி - 500 கிராம்

மல்லி இலை - 1 கப் பொடிதாக நறுக்கவும்

புதினா - 1 கப் பொடிதாக நறுக்கவும்

பழுத்த மிளகாய் – 4 மெல்லியதாக நீளவாக்கில் வெட்டவும்

கேரட் – சின்னது 1 துருவிக்கவும்

சீரகத்தூள் – 1 மேசைக்கரண்டி

மிளகுத்தூள் – 1 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

பட்டை - 2 இன்ச் நீளம்

கிராம்பு - 3

ஏலம் – 3

பிரிஞ்சி இலை – 3

நெய் - கப்

உப்பு – தேவையான அளவு

பன்னீர் – ½ கப்

கேசரி பவுடர் ½ தேக்கரண்டி

செய்முறை:

கோழியில் மஞ்சத்தூள் , உப்பு போட்டு அரைவேக்காடாக பொறித்து எடுத்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவை மூன்றையும் நன்றாக அரைத்துக் கொண்டு இஞ்சி & பூண்டு விழுதுகளோடு கலந்து வைத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலம், பிரிஞ்சி இலை போட்டு பின்பு அரைத்த கலவையை அதில் சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு மஞ்சத்தூள், மிளகாய்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் ,உப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு 10 நிமிடம் வெந்ததும் பொறித்த கோழித்துண்டுகளைபோட்டு நன்றாக பிரட்டவும். எண்ணெய் மேலாக மிதந்ததும் இறக்கி விடவும்.

அரிசியை உப்பு சேர்த்து அரை வேக்காடாக சமைத்து கொள்ளவும். பன்னீருடன் கேசரி பவுடரை கலந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பாதி வெந்த சாதத்தை கொஞ்சம் பரத்தினாற் போல் கொட்டி அதனுடன் கோழி மசாலாவை பாதி அளவு சேர்த்து நறுக்கி வைத்துள்ள மல்லி, புதினா, பழுத்த மிளகாய், கேரட்டை சிறிது தூவி பன்னீரையும் மேலாக தெளிக்கவும். பிறகு மீண்டும் சாதத்தை கொட்டி மேற்சொன்னது போலவே செய்யவும். மீண்டும் சாதத்தைக் கொட்டி மீதமுள்ள பன்னீரையும் சேர்த்து தட்டு போட்டு மூடவும். அதன் மீது கனமான பொருளை (ஒரு பாத்திரத்தில் நீர் பிடித்து) வைக்கவும். குறைந்த தீயில் 20 நிமிடம் வேக வைக்கவும்.பரிமாறும் போது சாதம், மசாலாவுடன் நன்கு சேரும்படி கலந்து வைக்கவும்.

குறிப்புகள்: