சிம்பிள் சிக்கன் புலாவ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிரியாணி அரிசி - அரைகிலோ

எண்ணெய் அல்லது லோ ஃபேட் மார்ஜரின் - 150 மில்லி

பட்டை, கிராம்பு, ஏலம் - தலா 2

பிரியாணி இலை - 1

சிக்கன் - 300 கிராம்

உருளை - 1

வெங்காயம் - 150 கிராம்

தக்காளி - 200 கிராம்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் ஃபுல்

சில்லிபவுடர் - 1 டீஸ்பூன்

மல்லி பவுடர் - 1 டீஸ்பூன்

தயிர் - 1 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சை - பாதி

பச்சை மிளகாய் - 2

மல்லி, புதினா- ஒரு கை அளவு

உப்பு - தேவைக்கு

செய்முறை:

முதலில் அரிசியை அலசி ஊற வைக்கவும். சிக்கனை சுத்தம் செய்து கழுவி நீர் இல்லாமல் வைக்கவும்.

வெங்காயம், உருளை, தக்காளி, மல்லி, புதினா, மிளகாய் கட் செய்து கொள்ளவும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் 100 மில்லி மார்ஜரினை அல்லது எண்ணெய் விட்டு காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலம், பிரியாணி இலை போட்டு, பின்பு வெங்காயம் சேர்த்து வதக்கவும், சிவந்தவுடன் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். சில்லி பவுடர், மல்லி பவுடர், மல்லி, புதினா, தக்காளி, உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து 2 நிமிடம் மூடி வைக்கவும், சிக்கன் சேர்த்து நன்கு வதக்கி மசாலா கோட் ஆகுமாறு பிரட்டவும். தயிர், லைம் ஜூஸ் சேர்க்கவும். 15 நிமிடம் வேக வைக்கவும்.

திறந்து அரிசிக்கு ஒன்னரை மடங்கு தண்ணீர் சேர்க்கவும். உப்பு பார்க்கவும். உருளை சேர்ப்பதால் கொஞ்சம் உப்பு அதிகம் தேவைப்படும்.

கொதி வந்தவுடன் அரிசி போட்டு மூடி வைக்கவும். 5 நிமிடம் மூடி வைத்து பின்பு சிம்மில் 10 நிமிடம் வைக்கவும்.

திறந்து அரிசி வெந்தவுடன் 50 மில்லி மார்ஜரினை அல்லது நெய் மேல் போட்டு மெதுவாக கிளறி மூடி வைக்கவும்.

10 நிமிடம் கழித்து திறக்கவும். சுவையான சிம்பில் சிக்கன் புலாவ் ரெடி.

இது சுவையில் ஹோட்டல் சிக்கன் புலாவ் போல் இருக்கும். இதில் உள்ள உருளை சாப்பிட அபாரமாக இருக்கும். தயிர் பச்சடி உடன் பரிமாறவும்.

குறிப்புகள்: