சிக்கன் 82
தேவையான பொருட்கள்:
ஊற வைத்து பொரிக்க
சிக்கன் போன்லெஸ் - அரை கிலோ
முட்டை - வெள்ளை கரு மட்டும்
காஷ்மீரி சில்லி - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
மைதா - ஒரு மேசைக்கரண்டி
கார்ன் மாவு - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்றரை தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
தாளிக்க:
பட்டர் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
முட்டை - இரண்டு
முந்திரி - 50 கிராம்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லித் தழை - சிறிது
பச்சைமிளகாய் - ஒன்று
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு கழுவி மீடியம் சைஸாக கட் பண்ணி கொள்ளவும்.
ஊறவைத்து பொரிக்க கொடுத்துள்ள மசாலாக்களை போட்டு பத்து நிமிடம் ஊறவைத்து பொரித்து எடுக்கவும்.
எண்ணெய் + பட்டரை காயவைத்து முந்திரி போட்டு லேசாக வறுத்து (முந்திரியை பாதியாக அரிந்து போடவும்)
அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். முட்டையை பச்சைமிளகாய், சிறிது உப்பு சேர்த்து நன்கு அடித்து வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்து கொத்தியது போல் கிளறி அதனுடன் பொரித்து வைத்துள்ள சிக்கன், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
சூப்பரான சிக்கன் 82 ரெடி.