சிக்கன் (அ) மட்டன் கீமா சோமாஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாவு தயாரிக்க:

மைதா - ஒரு கப்

வறுத்த ரவை - கால் கப்

கார்ன்ஃப்ளார் மாவு - ஒரு மேசைக்கரண்டி

உப்பு - கால் தேக்கரண்டி

பட்டர் - ஒரு மேசைக்கரண்டி

பில்லிங் தயாரிக்க:

சிக்கன் (அ) மட்டன் கீமா - 100 கிராம்

கேரட் - அரை கப்

தக்காளி - பாதி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி

வெங்காயம் - ஐந்து

பச்சை மிளகாய் - ஒன்று

கொத்தமல்லி தழை - அரை கப்

கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி

செய்முறை:

முதலில் ஒரு தேக்கரன்டி எண்ணெய் விட்டு பாதி வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

அதே சட்டியில் கீமா, இஞ்சி பூண்டு, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் அதில் கரம் மசாலா தூள், வதக்கிய வெங்காயம், கொத்தமல்லி தழை அனைத்தையும் போட்டு ஒரு கிளறு கிளறி எடுத்து ஆற வைக்கவும்.

மைதா மாவில் குழைக்க வேண்டியவைகளை சேர்த்து குழைத்து கொள்ளவும்.

ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு பூரி உருண்டைகளாக போடவும்.

பூரி உருண்டைகளை மைதாவில் சிறிது அரிசி மாவு கலந்து தேய்த்து சோமாஸ் செய்யும் அச்சில் வைத்து பில்லிங்கை ஒரு ஸ்பூன் உள்ளே வைத்து வெளியில் வராதவாறு அச்சை மூடவும். வெளியில் வந்தால் பொரிக்கும் போது அவ்வளவு பில்லிங்கும் வெளியில் வரும்.

அச்சு இல்லாதவர்கள் சிறிய பூரி மாதிரி உருட்டி விட்டு மைதா தண்ணீர் சேர்த்து கலந்து ஒரத்தில் வைத்து இந்த கலவையை ஒட்டி ஒரு சாவியை கொண்டு மூடும் இடத்தில் லைனாக குத்தி கொண்டே வர வேண்டும்.

இப்போது எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: