சிக்கன் வெள்ளை குருமா
தேவையான பொருட்கள்:
தாளிக்க:
டால்டா - ஒரு தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - இரண்டு
வெங்காயம் - இரண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - கொஞ்சம்
ஊற வைக்க:
சிக்கன் - கால் கிலோ
தயிர் - இரண்டு மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
அரைக்க:
பொட்டுக்கடலை - ஒரு தேக்கரண்டி
முந்திரி - நான்கு
பட்டை - சிறிய துண்டு
மிளகு - நான்கு
தேங்காய் துருவல் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - கொஞ்சம் மேலே தூவ
செய்முறை:
முதலில் சிக்கனை சுத்தம் செய்து தண்ணீரை வடித்து அதில் தயிர், உப்பு போட்டு பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
அடுத்து மிக்ஸியில் பொட்டுக்கடலை, மிளகு, முந்திரி, பட்டையை போட்டு பொடித்து விட்டு தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும்.
இப்போது நெய் டால்டா ஊற்றி கறிவேப்பிலை, பச்சை மிளகாய் கீறி போட்டு நல்ல வதக்கி வெங்காயத்தை போட்டு வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி கொத்தமல்லி கீரையும் சேர்த்து தாளிக்கவும்.
இப்போது ஊற வைத்த சிக்கனை போட்டு ஐந்து நிமிடம் வேக விட்டு அரைத்ததை சேர்த்து தேவைக்கு தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்