சிக்கன் வெஜ் புலாவ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி- 400கிராம்

சிக்கன் - கால் கிலோ

காய்கறி - கால் கிலோ

( கேரட்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3டீஸ்பூன்

கரம் மசாலா - அரைடீஸ்பூன்

வெங்காயம் - 100கிராம்

தக்காளி - 200 கிராம்

பச்சை மிளகாய் - 3

மல்லி,புதினா - தலா 2 டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன்

மல்லித்தூள் - 1டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்

எண்ணெய் நெய் - தலா 50 மில்லி

விரும்பும் கலர் - பின்ச்

உப்பு - தேவைக்கு.

செய்முறை:

அரிசியை நன்கு அலசி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.சிக்கனை சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடிகட்டவும்.வெங்காயம்,தக்காளி,மல்லி,புதினா காய்கறிகளை நறுக்கி வைக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் நெய் விடவும்,நறுக்கிய வெங்காயம் வதக்கவும்,சிவறவும்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.சிறிது வதங்க விடவும்.

பின்பு நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்க்கவும்.மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,மல்லித்தூள் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.அத்துடன் சிக்கன் சேர்த்து பிரட்டி விடவும். நறுக்கிய காய்கறிகள் சேர்க்கவும்.சிறிது மூடி போட்டு வேக விடவும்.மல்லி புதினா,பச்சை மிளகாய் சேர்க்கவும்.

அத்துடன் ஊறவைத்த அரிசியை சேர்த்து உடையாதவாறு ஒரு பிரட்டு பிரட்டி அரிசியின் அளவிற்கு இரண்டு மடங்கு கொதி நீர் சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.

எல்லாம் சேர்ந்து கொதிவரவும் மூடி போட்டு மீடியம் நெருப்பில் வேக விடவும்.சாதம் வெந்து தண்ணீர் வற்றி வரும் பொழுது விரும்பினால் பின்ச் கலர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

தீயை மிகவும் குறைத்து 10 நிமிடம் மூடி வைத்து புலாவ் ரெடியானவுடன் அடுப்பை அணைக்கவும்.

கால் மணி நேரம் கழித்து சாதம் உடையாதவாறு பிரட்டி எடுத்து பரிமாறவும்.

சுவையான சிக்கன் வெஜ் புலாவ் ரெடி.ஆனியன் ரைத்தா அவித்த முட்டையுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: