சிக்கன் லாலிபாப்
தேவையான பொருட்கள்:
சிக்கன் லெக் பீஸ் - எட்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 6 (அரைத்து ஊற்றவும்)
சில்லி சாஸ் - அரை தேக்கரண்டி
டொமேட்டோ சாஸ் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
முட்டை - இரண்டு (வெள்ளை கரு மட்டும்)
மைதா - ஐம்பது கிராம்
ரெட் கலர் - ஒரு பின்ச்
தண்ணீர் - அரை கப்
சர்க்கரை - கால் தேக்கரண்டி
செய்முறை:
லெக் பீஸை சுத்தம் செய்து கழுவி லெக் சைடில் உள்ள தோலை எடுத்து குச்சி மட்டும் இருப்பது போல் கட் செய்து கொள்ளவும். (பிடித்து சாப்பிடவதற்கு)
சிக்கனில் அனைத்து மசாலாக்களையும் போட்டு ஒன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
முட்டையின் வெள்ளை கருவை நன்கு நுரை பொங்க அடித்து வைத்து கொள்ளவும்.
அதில் இந்த சிக்கனை தோய்த்து எடுத்து கொள்ளவும். எண்ணெயை காயவைத்து சிக்கன் லாலிபாப்பை போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்.
பொரித்தெடுத்து தட்டில் அடுக்கி வைத்து உருக்கிய பட்டர் கொஞ்சம், கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கி தூவி பரிமாறவும்.