சிக்கன் யாஹேர்த்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - அரைக்கிலோ

இஞ்சி பூண்டு விழுது - 2 பெரியகரண்டி

தயிர் - அரை கப்

எலுமிச்சைப்பழம் - 1

மிளகுத்தூள் - 1 பெரியகரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரித்து எடுப்பதற்கு

செய்முறை:

கோழியை சுத்தம் செய்து துண்டுகள் போட்டுக் கொள்ளவும்.

அதில் எண்ணெய் தவிர மீதி அனைத்துப் பொருட்களையும் போட்டு அத்துடன் நறுக்கின கோழித் துண்டங்களையும் சேர்த்து ஒன்றாக கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்

பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, ஊற வைத்த கோழித்துண்டங்களைப் போட்டு பொரியவிட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: