சிக்கன் மலாயி
தேவையான பொருட்கள்:
கோழி - 500 கிராம்
கறி மசாலாத்தூள் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
உப்பு - ஒரு ஸ்பூன்
கிரேவி செய்ய தேவையானவை:
வெங்காயம்(நடுத்தரமானது) - 2
காய்ந்த மிளகாய் - 15
பூண்டு (சிறியது) - பாதி
எலுமிச்சைப்பழம் - பாதி
உப்பு - ஒரு ஸ்பூன்
செய்முறை:
முதலில் கோழிக்கறியை சுத்தம் செய்து மசாலாத்தூள், மிளகாய் தூள், இஞ்சி, பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் உப்பு அனைத்தையும் போட்டு பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஊறும் நேரத்தில் கிரேவியை தயார் பண்ணிக் கொள்ளலாம். காய்ந்த மிளகாயை லேசாக சூடுப்படுத்திய வெந்நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, அதை கீறிவிட்டு உள்ளே உள்ள விதைகளை நீக்கி விட வேண்டும்.
பிறகு வெங்காயம், பூண்டு, விதை நீக்கிய மிளகாய் மூன்றையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
மசாலாவில் ஊறவைத்த கோழிக்கறியை, லேசாக எண்ணெய் விட்டு பொன்னிறமாக பொரித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதே வாணலியில், பொரித்த கோழித்துண்டுகளோடு அரைத்து வைத்துள்ள விழுதையும் ஊற்றி, மீதியுள்ள ஒரு ஸ்பூன் உப்பை தூவி 2 அல்லது 3 நிமிடம் (அடிப்பிடிக்காமல்) கிளறி விட வேண்டும்.
வெங்காயம், பூண்டின் பச்சை வாடை மாறியதும் எலுமிச்சைப்பழத்தை அதன் மீது பிழிந்து விட்டு உடனே இறக்கி, சூடாக பரிமாறவும்.