சிக்கன் ப்ரை
தேவையான பொருட்கள்:
சிக்கன் பீஸ் - 12
காஷ்மீர் மிளகாய் துள் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 மேசைக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - ஒரு மேசைக்கரண்டி
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
லெமென் - ஒன்று (சிக்கனை கழுவுவதற்கு)
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி (சிக்கன் கழுவுவதற்கு)
செய்முறை:
சிக்கனை கழுவி சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள், லெமென் ஜூஸ் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வடிக்கட்டவும்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து மசாலாக்களையும் போட்டு தக்காளி ஜூஸ் மட்டும் பிழிந்தால் போதும் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைத்து தண்ணீரை வற்ற விடவும்.
ஒரு நாண் ஸ்டிக் தவாவில் எண்ணெய் கொஞ்சமாக ஊற்றி நல்ல மொறுகலாக வறுத்தெடுக்கவும். இது உடனடி சிக்கன் ரெடி.