சிக்கன் பிரியாணி (1)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - மூன்று டம்ளர்

சிக்கன் - அரை கிலோ

வெங்காயம் - நான்கு

தக்காளி - மூன்று

தயிர் - கால் டம்ளர்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - மூன்று மேசைக்கரண்டி

கொத்தமல்லி - கால் கட்டு

புதினா - எட்டு இதழ்

பச்சை மிளகாய் - நான்கு

மிளகாய் தூள் - 1 1/4 தேக்கரண்டி

எலுமிச்சை - பாதி பழம்

பட்டை - ஒரு இன்ச் அளவு ஒன்று

கிராம்பு - இரண்டு

ஏலம் - ஒன்று

எண்ணெய் - கால் டம்ளர்

நெய் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

செய்முறை:

முதலில் அரிசியை களைந்து இருபது நிமிடம் ஊற வைக்கவும்.

சிக்கனை லெக் பீஸ் போட வேண்டாம் அது ஃப்ரை செய்தால் தான் நல்ல இருக்கும்..

எலும்புடன் சேர்ந்த சிக்கனை (அரை கிலோ) கழுவி தண்ணீரை வடிகட்டவும்.

எண்ணெயை காய வைத்து பட்டை, ஏலம், கிராம்பு போட்டு வெடித்ததும், வெங்காயத்தை போட்டு நல்ல கிளறி கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி சிம்மில் ஐந்து நிமிடம் விட்டு மீண்டும் ஒரு முறை கிளறி கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி போடவும்.

பச்சை மிளகாயை இரண்டாக ஒடித்து போடவும்.

இரண்டு நிமிடம் கழித்து தக்காளியை போட்டு கிளறி, மிளகாய் தூள், உப்பு தூள் சேர்த்து கிளறி மூடி போட்டு சிம்மில் வைக்கவும்.

தக்காளி நல்ல வெந்து கூட்டாகட்டும். சிக்கன் சீக்கிரம் வெந்து விடும் ஆகையால் கடைசியில் சேர்க்கனும். இல்லை என்றால் பீஸ் எதுவும் கிடைக்காது. தூளாகி எலும்பு மட்டும் இருக்கும்.

தக்காளி வதங்கியதும் சிக்கனை போட்டு கிளறி தயிரையும் சேர்த்து நல்ல வேக விடவும்.

மூடி போட்டே இருந்தால் பிரியாணி நல்ல மணமாக இருக்கும்.

நல்ல வெந்து எண்ணெய் முழுவதும் மேலே மிதக்கும். அப்போது அடுப்பை அனைத்து விட்டு உலை கொதிக்க விட்டு அரிசியை களைந்து போட்டு முக்கால் வேக்காடு வெந்ததும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் கொஞ்சமாக லெமென் ஜூஸ் பிழியவும், சிறிது உப்பும் சேர்க்கவும்.

ஒரு கண் வடிகட்டியில் வடித்து(கஞ்சியை கீழே கொட்ட வேண்டாம்) அது தம் போடுவதற்கு தேவைப்படும்.

வெந்த சாதத்தை கிரேவியில் கொட்டி கிளறி சமப்படுத்தி தம் போடவும்.

இதற்கு தொட்டு கொள்ள, தயிர் சட்னி, எண்ணெய் கத்திரிகாய், சாலட் போன்றவை ரொம்ப நல்ல இருக்கும்.

குறிப்புகள்: