சிக்கன் பரோட்டா சாண்ட்விச்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பரோட்டா - மூன்று (பெரியது)

சிக்கன் - மூன்று (எலும்பில்லாதது பெரிய துண்டுகள்)

சிக்கனில் ஊறவைக்க:

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி

சோயாசாஸ் - ஒரு தேக்கரண்டி

உப்பு - அரை தேக்கரண்டி (அ) தேவைக்கு

மிளகு தூள்- கால் தேக்கரண்டி

மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

ரெட் கலர் பொடி - ஒரு பின்ச்

தயிர் - ஒரு தேக்கரண்டி

சாண்ட்விச்சில் சேர்க்க:

கேப்பேஜ் - நீளமாக வெட்டியது (12 துண்டுகள்)

கேரட் நீளமாக வெட்டியது - (9 துண்டுகள்)

கேப்ஸிகம் - நீளமாக வெட்டியது ( மூன்று துண்டுகள்)

கொத்தமல்லித் தழை - மூன்று மேசைக்கரண்டி (பொடியாக அரிந்தது)

தாளிக்க:

பட்டர் + எண்ணெய் - மூன்று தேக்கரண்டி

கரம் மசாலா - கால் தேக்கரண்டி

வெங்காயம் - இரண்டு

தக்காளி - ஒன்று

பச்சைமிளகாய் - ஒன்று (பொடியாக அரிந்தது)

கொத்தமல்லித் தழை - சிறிது

பரோட்டா தயாரிக்க:

மைதா மாவு - ஒன்றரை டம்ளர் (300 கிராம்)

பால் - கால் டம்ளர்

பட்டர் + எண்ணெய் - மூன்று மேசைக்கரண்டி

உப்பு - அரை தேக்கரண்டி

சர்க்கரை - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

முதலில் மாவில் சேர்க்க வேண்டியவைகளை சேர்த்து நன்கு பிசைந்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவேண்டும். (மூன்று பிரிவாக பிரித்து சிறிது எண்ணெய் தடவி வைக்கவும்)

இப்போது சிக்கனில் ஊற வைக்க வேண்டியவைகளை ஊறவைத்து ஒரு மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்.

க்ரில் செய்தோ அல்லது தோசை தவாவிலோ பொரித்து கொள்ளவேண்டும்.

ஒரு பெரிய இரும்பு வாணலியில் பட்டர் எண்ணெய் கலவை ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை போட்டு தாளித்து ரொம்ப வதக்க தேவையில்லை பொரித்த சிக்கனை நல்ல உதிர்த்து போட வேண்டும். கடைசியில் கரம் மசாலா தூவி வதக்கவும்.

கலவை நன்கு ட்ரையாக வதக்கி முட்டை கொத்து பரோட்டா போல் இருக்க வேண்டும் கேரட், கேப்பேஜ், கேப்ஸிகம் ஒரு ஜான் நீளத்துக்கு மெல்லியதாக இருக்க வேண்டும்.

இப்போது மூன்று பரோட்டாக்கள் சுட்டெடுக்க வேண்டும் நல்ல தேய்த்து கொசுவம் வைப்பது போல் மடிப்பு வைத்து பிறகும் சிறிது நேரம் ஊற வைக்கவும்.

அப்போது தான் பரோட்ட நல்ல தேய்க்க வரும்.

மூன்று பரோட்டாக்களை சுட்டெடுத்து அதில் மூன்றில் ஒரு பாகம் சிக்கன் கலவை வைத்து காய்களையும் மூன்றில் ஒரு பங்கு வைத்து லேசாக லெமென் ஜூஸும் பிழிந்து பரோட்டாவை சாண்விட்ச் போல் சுருட்டி சாப்பிடவும் அல்லது பாயில் பேப்பர் (அ) பட்டர் பேப்பரில் வைத்து சாப்பாட்டுக்கு பதில் கட்டி கொண்டு போகலாம்.

நல்ல ஹெவி ஒருத்தருக்கு ஒன்று போதுமானது.

குறிப்புகள்: