சிக்கன் பக்கோடா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - கால் - அரைகிலோ

கடலை மாவு - 100 கிராம்

அரிசி மாவு - 2 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் - 10

மஞ்சள் பொடி - கால் ஸ்பூன்

சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்

மல்லி பொடி - 1 டீஸ்பூன்

சீரகப்பொடி - அரைஸ்பூன்

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து மஞ்சள் பொடி, அரைஸ்பூன் சில்லி பவுடர், அரைஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும்

வெங்காயம் பேஸ்ட் செய்து கொள்ளவும், அத்துடன் கடலை மாவு, அரிசிமாவு, அரைஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், அரைஸ்பூன் சில்லி பவுடர், மல்லி பொடி, சீரகப்பொடி, உப்பு சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.

எண்ணெயை கடாயில் சூடுப்பண்ணவும். வேகவைத்த சிக்கன் துண்டுகளை கடலைமாவு கலவையில் பிரட்டி சிவக்க பொரித்து எடுக்கவும்.

சுவையான சிக்கன் பக்கோடா ரெடி.

குறிப்புகள்: