சிக்கன் சேமியா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/4 கிலோ

சேமியா - 200 கிராம்

தக்காளி - இரண்டு

காரட் - ஒன்று

காலி ஃப்ளவர் - ஒரு கப்

பச்சை பட்டாணி - இரண்டு டேபிள் ஸ்பூன்

பீன்ஸ் - பத்து

நறுக்கிய கொத்தமல்லி - இரண்டு ஸ்பூன்

வெங்காயம் - 1

இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்

தயிர் - 1/2 கப்

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

மிளகாய் தூள்- 1 ஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

உப்பு - தேவையான அளவு

தேங்காய்ப்பால் - 1/2 டம்ளர்

தண்ணீர் - 2 கப்

தேங்காய் எண்ணெய் - 100 கிராம்

செய்முறை:

சிக்கனில் கொஞ்சம் இஞ்சி, பூண்டு விழுது, தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு கிளறி வைக்கவும்.

காரட், பீன்ஸ், காலி ஃப்ளவர் பொடியாக நறுக்கி வைக்கவும்.

வெங்காயம், தக்காளியை மெல்லியதாக, நீளமாக நறுக்கி வைக்கவும்

குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி காயந்தவுடன் கிராம்பு, பட்டை, ஏலக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தயிர் போட்டு தாளிக்கவும்.

பிறகு கிளறி வைத்த கறி கலவையினை சேர்க்கவும்.

பொடியாக நறுக்கிய காரட், பீன்ஸ், காலி ஃப்ளவர் தக்காளியை வதக்கவும்.

இரண்டு விசில் வைத்து இறக்கவும்.

வேகவைத்த கறியில் தேங்காய் பால், சேமியா போட்டு சேர்த்து நறுக்கிய கொத்தமல்லி 1 வீசில் வைத்து இறக்கவும். சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: