சிக்கன் சூப் (சளிக்கு)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சிக்கன் - நான்கு துண்டு எலும்புடன்

மிளகு தூள் - அரை தேக்கரண்டி

தனியா தூள் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி

வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

கொத்தமல்லி தழை - சிறிதளவு

நெய் - ஒரு தேக்கரண்டி

கரம் மாசாலா தூள் - கால் தேக்கரண்டி

செய்முறை:

சிக்கனை கழுவி அதில் மேலே குறிப்பிட்டுள்ள மசாலாக்களை போட்டு (வெங்காயம் பொடியாக நறுக்கி போடவும், தக்காளியை நல்ல பிழிந்து விடவும்) மூன்று கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் நல்ல ஆறு விசில் விட்டு இறக்கவும்.

வெந்ததும் வடிக்கட்டி அதை சூடான சாதத்தில் பிசைந்து கொடுக்கவும். இல்லை உங்கள் குழந்தை குடித்தால் அப்படியே குடிக்க கொடுங்கள்.

குறிப்புகள்: