சிக்கன் சாப்பீஸ் (வேறு முறை)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - அரை கிலோ

வெங்காயம் - அரை கிலோ

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 5 அல்லது 6

மல்லிக்கீரை - ஒரு கட்டு

எலுமிச்சைப்பழம் - பாதி

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - 2 ஸ்பூன்

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்

எண்ணெய் - 100 மில்லி

உப்பு - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

முதலில் கோழிக்கறியில் மிளகாய்தூள், மசாலாத்தூள், மஞ்சள் தூள், பாதி இஞ்சி பூண்டு விழுது, பாதி உப்பு அனைத்தையும் போட்டு நன்றாக பிரட்டி அரை மணி நேரம் ஊற விடவும்.

வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக்கொண்டு, தக்காளி, பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கி அத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் பாதி எண்ணெய் விட்டு, மசாலாவில் ஊறிய கோழியை சற்று முறுகலாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

மீதி எண்ணெயை இன்னொரு வாணலியில் விட்டு, மீதி இஞ்சி பூண்டு விழுதை போட்டு முறுக ஆரம்பிக்கும்போது நறுக்கி வைத்துள்ளவற்றை போட்டு லேசாக 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு பொரித்துவைத்துள்ள கோழியை அதில் போட்டு புரட்டி, மீதி உப்பை சேர்த்து கிளறி, அதன் மேல் மல்லிக்கீரயை நைசாக நறுக்கிப் போட்டு மீண்டும் பிரட்டி, இறக்கும் முன் எலுமிச்சைப்பழத்தை பிழிந்து பிரட்டிவிட்டு எடுத்து விட வேண்டும்.

குறிப்புகள்: