சிக்கன் கூட்டு
தேவையான பொருட்கள்:
சிக்கன் - அரை கிலோ
வெங்காயம் - இரண்டு
தக்காளி - மூன்று
சிக்கன் மசாலா - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - ஐந்து மேசைக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - மூன்று தேக்கரண்டி
கேப்ஸிகம் - சிறிது
கொத்தமல்லித்தழை - சிறிது
பட்டர் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
சிக்கனை கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடிக்கவும்.
ஒரு வாயகன்ற சட்டியை காய்ந்ததும் அதில் பட்டையை போட்டு வெடித்ததும் வெங்காயதை பொடியாக அரிந்து போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்க வேண்டும்.
தக்காளியை மிக்ஸியில் அடித்து ஊற்றி கிளறி விட்டு அதில் சிக்கன் மசாலா, மிளகாய் தூள், உப்புதூள் போட்டு நன்கு கிளறி கழுவி வைத்துள்ள சிக்கனை போட்டு அதிக தீயில் ஒரு நிமிடம் கொதிக்க விட்டு தீயை குறைத்து வைத்து நன்கு வெந்து கூட்டு கிரிப்பாகும் வரை மூடி போட்டு வேக விட வேண்டும்.
கடைசியில் கேப்ஸ்சிகம், கொத்தமல்லி, பட்டர் போட்டு கிளறி இருக்க வேண்டும்.
சுவையான சிக்கன் கூட்டு ரெடி.