சிக்கன் கிரேவி

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கோழி - ஒரு கிலோ

தக்காளி - 150 கிராம்

வெங்காயம் - 150 கிராம்

பூன்டு - ஐம்பது கிராம்

இஞ்சி - 100 கிராம்

மிளகாய் தூள் - 25 கிராம்

மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - 150 கிராம்

எலுமிச்சை - 2

கொத்தமல்லி - அரை கட்டு

புதினா - கால் கட்டு

பட்டை, ஏலம், கிராம்பு - தலா மூன்று

செய்முறை:

சிக்கனை இரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைத்து தனியாக வைக்கவும்.

இப்போது கிரேவியை தாளிக்கவும்.

எண்ணெயை காய வைத்து பட்டை, ஏலம், கிராம்பு போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்,

இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்ச வாடை போகிறவரை சிம்மில் வைத்து வேகவிடவும், பிறகு கொத்தமல்லி புதினா சேர்க்கவும்.

பிறகு தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தேவைக்கு போட்டு நல்ல சிம்மில் வைத்து கெட்டியாகட்டும்.

பிறகு வேக வைத்த சிக்கனை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரையும் ஊற்றி கொதிக்கவிட்டு கிரேவி பதம் வந்ததும் இறக்கவும்.

குறிப்புகள்: