சிக்கன் காய்கறி சால்னா

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

எலும்பு சிக்கன் பீஸ் - கால் கிலோ

விரும்பிய காய்கறிகள் - கால் கிலோ

(கேரட், அவரை, உருளை, காலிப்ளவர்)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

கரம்மசாலா - கால் ஸ்பூன்

சில்லிபவுடர் - 1-2 டீஸ்பூன்

மஞ்சள் பொடி - அரை ஸ்பூன்

தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்

முந்திரிப்பருப்பு - 4

தக்காளி - 2

வெங்காயம் - 2

பச்சைமிளகாய் - 2

மல்லி, புதினா - சிறிது

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து கழுவி எடுத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மல்லி, புதினா, காய்கறிகள் கட் செய்து கொள்ளவும், தேங்காய் முந்திரிப்பருப்பு அரைத்துக்கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம் வதக்கி, இஞ்சிபூண்டு வதக்கி, கரம்மசாலா, தக்காளி, மல்லி, புதினா, மிளகாய், உப்பு போட்டு மசிந்தவுடன் சிக்கன் சேர்க்கவும். நன்கு கொதிவந்ததும் சிம்மில் வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.

பின்பு காய்கறிகளை சேர்க்கவும். காய் வெந்தவுடன் தேங்காய் அரைத்தது சேர்த்து கொதி வந்து சிம்மில் வைத்து எண்ணெய் தெளிந்து இறக்கவும்.

சுவையான சிக்கன் காய்கறி சால்னா ரெடி. இதனை சப்பாத்தி, ப்ளைன் ரைஸ் உடன் பரிமாறலாம்.

குறிப்புகள்: