சிக்கன் கட்லெட்
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
மஞ்சள்தூள் - அரைஸ்பூன்
ப்ரெட் க்ரெம்ப்ஸ் - 3 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 2
உருளைகிழங்கு - 1
நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் ஸ்பூன்
முட்டை வெள்ளைகரு -1
சில்லி பவுடர் - கால் ஸ்பூன்
மிளகுத்தூள் - கால் ஸ்பூன்
சீரகத்தூள் - கால் ஸ்பூன்
சோம்புத்தூள் - கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மல்லி புதினா - சிறிது
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
சிக்கனை சிறிய துண்டுகளாக்கி நன்கு கழுவி நீர் வடிகட்டிக்கொள்ளவும். வெறும் பாத்திரத்தில் சிக்கன் உப்பு, மஞ்சள் போட்டு கலந்து பாதி வெந்தவுடன் எடுத்து வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். வெங்காயம், இஞ்சிபூண்டு, பச்சைமிளகாய், மல்லி, புதினா சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும், அதனுடன் சிக்கன் சேர்த்து 2 சுற்றி எடுக்கவும்,
தயார் செய்த சிக்கனில், ப்ரெட் க்ரெம்ப்ஸ், சில்லி பவுடர், மிளகு, சீரகம், சோம்பு, கரம்மசாலா தூள்கள், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, முட்டை வெள்ளைக்கரு, உப்பு தேவைக்கு சேர்த்து மிக்ஸ் செய்து வைக்கவும்.
இதனை தேவையான அளவு எடுத்து வட்டமாக அல்லது நீள் வட்டமாக தட்டி ஒரு ப்ரை பேனில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொரித்தெடுக்கவும்.
சுவையான சிக்கன் கட்லெட் ரெடி. இதனை ஃப்ரைட் ரைஸ் அல்லது வெறுமனே தக்காளி சாஸ் உடன் பரிமாறலாம்.