சிக்கன் கட்லட்
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 150 கிராம் (வேக வைத்து மசிக்கவும்)
சிக்கனை சுருட்டி கொள்ள:
சிக்கன் கீமா - 100 கிராம்
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்றரை தேக்கரண்டி
தக்காளி - கால் துண்டு (பொடியாக நறுக்கி போடவும்)
தயிர் - அரை தேக்கரன்டி
இதெல்லாம் போட்டு பிசறவும்:
வெங்காயம் - இரண்டு
பச்சை மிளகாய் - இரண்டு
கொத்தமல்லி தழை - அரை கப் (பொடியாக நறுக்கியது)
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
முட்டை - டிப் பண்ண தேவையான அளவு (1 1/2)
க்ரெம்ஸ் பவுடர் - முக்கி கொள்ள தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை கீமா செய்து சுருட்ட வேண்டியவைகளை சுருட்டி ஆற வைக்கவும்.
உருளையை வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடித்து ஆற வைத்து சிக்கனுடன் சேர்த்து பிசையவும்.
கடைசியில், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கரம் மசாலா தூள் சேர்த்து நல்ல கெட்டியாக பிசைந்து முட்டையில் இரண்டு பக்கமும் டிப் செய்து க்ரம்ஸ் பவுடரில் இரண்டு பக்கமும் முக்கி ஒரு தட்டில் அடுக்கி வைத்து சிறிது நேரம் கழித்து பொரிக்கவும்.
டொமேடோ கெட்சப்புடன், க்ரீம் ஆஃப் சிக்கன் சூப்புக்கு வைத்து சாப்பிடுங்கள்.