சிக்கன் அக்பரா
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ
நெய் - 2 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 4 (நடுத்தரமானது)
தக்காளி - 3
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
மல்லித் தூள் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - தேவைக்கேற்ப
செய்முறை:
சிக்கனைச் சுத்தம் செய்து துண்டுகளாக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லித் தழையைப் பொடியாக நறுக்கவும்.
குக்கரில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது மற்றும் சிக்கன் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தக்காளி, மல்லித் தூள், கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி சிறிது நேரம் வேகவிடவும்.
வெந்ததும் கொத்தமல்லித் தழை சேர்க்கவும். குழம்பு அதிகமாக இருந்தால் மூடியை எடுத்துவிட்டு திறந்த நிலையில் வேக வைக்கவும்.
சுவையான சிக்கன் அக்பரா தயார்.
குறிப்புகள்:
சப்பாத்தி, பரோட்டா, புலாவ் ஆகியவற்றிற்கு சரியான பக்க உணவு இது.