சாக்லேட் புட்டிங்
தேவையான பொருட்கள்:
மைதா - 1 கப்
சீனி - 1/2 கப்
கோகோ பவுடர் - 1 மே க
முட்டை - 3
பட்டர் - 50 கி ( உப்பு இல்லாதது)க்
காய்ச்சிய பால் - 1/2 கப்
கஸ்டர்டு சாஸ் செய்ய
வனிலா கச்டர்ட் பவுடர் 1/2 கப்
பால் - 1 கப் + 1/2 கப்
சீனி - 2 மே. க
செய்முறை:
ஒரு காய்ந்த பௌலில் பட்டரையும்,சீனியையும் போட்டு நன்றாக அடித்து கொள்ள வேண்டும்.
பட்டரும்,சீனியும் கீரீம் போல் ஆனதும் ,முட்டயை உடைத்து ஊற்றி எக் பீட்டரால் 5நிமிடம் அடிக்க வேண்டும்.
மைதா,கோகோ பவுடர், 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒன்றாக சலித்து வைத்து கொள்ளவும்.
இந்த மாவை முட்டை கலவையில் சிறிது சிறிதாக தூவி பாலையும் ஊற்றி அடித்து கொள்ள வேண்டும்.
ஒரு இட்லி பாதிரத்தில் தண்ணீர் விட்டு ஸ்டவில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
மாவு கலவையை ஒரு புட்டிங் கிண்ணத்தில் ஊற்றி ஒரு அலுமினிய fஆயில் கொண்டு புட்டிங் கிண்ணத்தை மூடி இட்லி பானையில் வைத்து மூடி விட வேண்டும்
45 நிமிடங்கள் கழித்து திறந்து ஒரு குச்சியை புட்டிங்ல் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரவேண்டும் . 10 நிமிடம் ஆற விட்டு ஓரத்தில் ஒரு கத்தியினால் லூஸ் செய்து ஒரு ப்ளேட்டில் கவிழ்க்கவும் ( மறக்காமல் புட்டிங் கிண்ணத்தில் பட்டர் தடவி பின் மாவை ஊற்றவும்)
கஸ்ட்டர்டு ஸாஸ் : ஒரு பேனில் பாலை விட்டு காய்ச்சவும். அரை கப் பாலில் கச்டர்ட் பவுடரை
கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும்
பால் கொதித்ததும் ஒரு நிமிடம் அடுப்பை ஆப் செய்து கஸ்டர்ட் கலவையை ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து பின் அடுப்பை ஆன் செய்து கஸ்டடை சீனி சேர்த்து காச்சவும்.. த்க்காக ஆனவுடன் இறக்கி விடவும்.
ஒரு ப்ளேட்டில் ஒரு துண்டு புட்டிங் வைத்து மேலாக கஸ்ட்ர்டு சாஸை ஊற்றி பறிமாறவும்.
ஏTஈளில் ஒரு துண்டு புட்டிங் வைத்து மேலே ஒரு கரண்டி ஸாஸ் ஊற்றி பறிமாறவும்.