சாஃப்ட் அண்ட் க்ரிஸ்பி கிட்ஸ் லாலி பாப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

லெக் பீஸ் - 900 கிராம் (ஒரு பாக்கெட்)

வினிக‌ர் - ஒரு மேசைக்க‌ர‌ண்டி

காஷ்மீரி சில்லி ப‌வுட‌ர் - ஒரு மேசைக்க‌ர‌ண்டி

ரெட் க‌ல‌ர் பொடி - கால் தேக்க‌ர‌ண்டி

உப்பு தூள் - 1 1/2 தேக்க‌ர‌ண்டி

மிள‌கு தூள் -‍ ஒரு தேக்க‌ர‌ண்டி

இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்க‌ர‌ண்டி

எலுமிச்சை - ஒன்று (சிறிய‌து)

த‌யிர் ‍- ஒரு மேசைக்க‌ர‌ண்டி

முட்டை - ஒன்று

மைதா - ஒரு குழிக்க‌ரண்டி

எண்ணெய் - பொரிக்க‌ தேவையான‌ அளவு

அல‌ங்க‌ரிக்க‌:

கேர‌ட்

வெள்ள‌ரி

த‌க்காளி

எலுமிச்சை

கொத்தம‌ல்லி த‌ழை

செய்முறை:

சிக்க‌ன் லெக் பீஸை தோலெடுத்து வினிக‌ர் சேர்த்து ஊற‌ வைத்து 5, 6 முறை நன்கு க‌ழுவிக் கொள்ளவும். லெக் பீஸ் அனைத்தையும் குறுக்காக‌ ஆழ‌மாக‌ கீறி விட்டு த‌ண்ணீரை வ‌டித்து வைக்க‌வும்.

சுவையான‌ சாஃப்ட் அண்ட் க்ரிஸ்பி கிட்ஸ் லாலி பாப் ரெடி

ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த லெக் பீஸை போட்டு அதனுடன் முட்டை, மைதா மாவு தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.

எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்.

சிக்கன் துண்டுகள் ஊறியதும் அதனுடன் முட்டை மற்றும் மைதா மாவை சேர்த்து பிசையவும்.

முட்டை, மைதா மாவு சேர்த்த சிக்கன் கலவையை ப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைத்து ஊற விடவும்.

சிக்கன் ஊறியதும் எடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நான்கு நான்கு துண்டுகளாக போட்டு பொரிக்கவும்

அடுப்பின் தீயின் அளவை மிதமாக வைத்து மூடி போட்டு வேக விடவும்.

சிக்கன் வெந்ததும் தீயின் அளவை அதிகப்படுத்தி நன்கு பொரிந்ததும் எடுத்து எண்ணெயை வடித்து வைக்கவும்.

குறிப்புகள்: