சம்மூன் வித் சாஸேஜ் சாண்ட்விச்
தேவையான பொருட்கள்:
சம்மூன் (லாங் பன்) - ஐந்து
சாஸேஜ் - ஐந்து
கெட்சப் - பத்து தேக்கரண்டி
சில்லி சாஸ் - ஐந்து தேக்கரண்டி
லெட்டியூஸ் இலைகள் - ஐந்து
மிளகு தூள் - அரைத் தேக்கரண்டி
உப்பு - அரைத் தேக்கரண்டி
சோயா சாஸ் - கால் தேக்கரண்டி
செய்முறை:
சாஸேஜை குக்கரில் சோயா சாஸ் சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுக்கவும். அப்ப தான் பச்ச வாடை இல்லாமல் இருக்கும்.
வெந்த சாஸேஜை நீளவாக்கில் இரண்டாக கட் பண்ணி பட்டரில் உப்பு, மிளகாய் தூள் தூவி ஒரு தேக்கரண்டி பட்டர் ஊற்றி வறுத்தெடுக்கவும்.
சம்மூனை(லாங் பண்ணை) இரண்டாக கீறி பட்டர் தடவி பொரித்தெடுக்கவும்.
பன்னின் இரு புறமும் கெட்சப் தடவி ஒரு பன்னுக்கு இரண்டு நீள சாஸேஜ் வைத்து சிறிது சில்லிசாஸ் தெளித்து லெட்டியூஸ் இலையை சிறிய துண்டுகளாக இரு புறமும் வைத்து பன்னை மூடவும்.
இதே போல் மீதம் உள்ள பன்னையும் செய்யவும்.
அருமையான குழந்தைகளுக்கு பிடிச்ச சம்மூன் சாஸேஜ் சாண்ட்விச் ரெடி.