சங்கரா மீன் பிரை 5
0
தேவையான பொருட்கள்:
சங்கரா மீன் - ஆறு துண்டு (இரண்டாகாக வெட்டியது)
அரைத்து கொள்ள
வெங்காயம் - ஒன்று
பூண்டு - மூன்று பல்
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
லெமென் - ஒன்று
செய்முறை:
மேலே அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்து, லெமென் சாறையும் ஊற்றி மீனில் கொட்டி ஒரு மூடியை போட்டு குலுக்குங்கள் கையால் பிசற தேவையில்லை.
இப்போது பத்து நிமிடம் ஊற வைத்து தவாவில் எண்ணெய் விட்டு தீயை மீடியமாக வைத்து முறுகலாக பொரிக்கவும்.
சுவையான சங்கரா மீன் ஃப்ரை ரெடி