க்ரீன் ஃபிஷ் கறி
தேவையான பொருட்கள்:
சீலா மீன் அல்லது அமூர் மீன் - அரை கிலோ
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
லைம் ஜூஸ் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று
மிளகாய் - ஒன்று அல்லது இரண்டு
பூண்டு பல் - இரண்டு
தேங்காய்த்துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 10 எண்ணம்
எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
சீரகம் - கால் ஸ்பூன்
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
மல்லித்தூள் - அரை ஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் - அரை ஸ்பூன்
தயிர் - 150 மில்லி
தண்ணீர் - முக்கால் கப்
கொத்தமல்லி இலை - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
மீனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கி உப்பு, மஞ்சள் தூள், லைம் ஜூஸ் போட்டு பிரட்டி 15 நிமிடம் வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டுபல், முந்திரிப்பருப்பு, பெருஞ்சீரகத்தூள், தேங்காய் போட்டு அரைத்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி சீரகம் போட்டு வெடித்தவுடன் அரைத்த கலவையை சேர்த்து, மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பிறகு தயிர், சிறிதாக நறுக்கிய மல்லி இலை போட்டு அடுப்பை சிம்மில் ஐந்து நிமிடம் வைக்கவும். அடுத்து மீன் துண்டுகளை போட்டு 10 நிமிடம் மூடி திறக்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.