கோழி பிரியாணி

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கோழி - ஒரு கிலோ

பச்சை அரிசி - ஒரு படி

வெங்காயம் - 2

தக்காளி - 4

தேங்காய் விழுது - ஒரு கப்

பச்சை மிளகாய் - 5

ஏலக்காய், கிராம்பு - தலா 2

பட்டை - ஒரு இன்ச் அளவு

இஞ்சி பூண்டு விழுது - 4 ஸ்பூன்

தயிர் - 2 கப்

மசாலாத்தூள் - 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

மல்லிக்கீரை - ஒரு கட்டு

நெய், எண்ணெய் சேர்த்து - 200 மில்லி

கேசரி பவுடர் - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சுத்தம் செய்த கோழிக்கறியில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, உப்பு அனைத்தையும் போட்டு பிரட்டி ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.

சட்டியில் நெய், எண்ணெய் கலந்து ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, மல்லிக்கீரை அனைத்தையும் (இதில் சொன்ன வரிசைப்படி) ஒவ்வொன்றாக போட்டு தாளித்து, கடைசியாக, பிரட்டி வைத்துள்ள கோழிக்கறியையும், வெட்டிய தக்காளியையும் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

வதங்கியவுடன் வேகும் அளவு தண்ணீரை ஊற்றி, மசாலாத்தூள், மஞ்சள் தூள், தேங்காய் விழுது, உப்பு போட்டு வேக வைக்க வேண்டும்.

அடுப்பில் தேவையான அளவு தண்ணீர் வைத்து, கேசரி பவுடர் கலந்து கொதி வந்தவுடன் அரிசியை கழுவி போட்டு பதமான அளவு வெந்தவுடன் வடித்து, வேக வைத்துள்ள குருமாவில் கொட்டி, அடுப்பை லேசாக வைத்து புழுங்கியவுடன் இறக்கி பரிமாறலாம்.

குறிப்புகள்: